Tuesday 23 December 2014

தடம் புரளும் தௌஹீத்வாதிகள்

குரானும் சஹீஹான  ஹதீசும் மட்டும் தான் இஸ்லாம் என்று நம் ஊருக்கு தௌஹீதை தைரியமாக சொன்னவர்கள் நஜாத்துகாரர்கள்.அந்த காலகட்டதில் எதிர்ப்புகள் இருந்தாலும் கொள்கையில் உறுதியாளர்கள் என்று பேர் எடுத்தவர்கள், மாற்று மதத்தினராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் இஸ்லாம் சம்மந்தமான எந்த கேள்விகளாக இருந்தாலும் அழகிய முறையில் எல்லாரும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைதனர். வட்டியில்லா கடன், ரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் சேவை  என்று மக்கள் சேவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் மற்றொரு புறம் மார்க்க பணிகள் தீவிரமாக நடக்கும், மத்ஹபுகளை எதிர்பதிலும் சரி மற்ற  பித்அத்களை எதிர்பதிலும் சரி வீரியமாக செயல்பட்டவர்கள். ஆடம்பர திருமணம் வரதட்சணை திருமணம் இவற்றை ஒழிக்க பாடுபட்டவர்கள். இஸ்லாம் சொன்ன சிறிய சுன்னாவாக இருந்தாலும் இஸ்லாம் தடை செய்த எவ்ளோ பெரிய ஹராமாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக அதை செய்தார்கள், மக்களுக்கும் அதை சொல்லி கடைபிடிக்க சொன்னார்கள். இப்படி தௌஹீதை விழுந்து விழுந்து சொன்னவர்களின் இன்றைய நிலையை பாருங்கள் அப்படியே மாறி போய் நிற்பதை பார்க்கிறோம். திருமணத்திலும் சரி ஜமாதின் உறுப்பினர்களை வழிநடதுவதிலும் சரி மற்ற சில விசயங்களிலும் அப்படியே தலை கீழே நிற்பதை நம்மால் காண முடிகிறது எந்த அளவிற்கு என்றால் அந்த ஜமாதின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இறந்தவர்களுக்காக 3 ஆம் சரத்து பாத்திஹா ஓதி சாப்பாடு வைப்பார்களே அதெல்லாம் அரங்கேறியது என்றால் இவர்களை என்ன சொல்வது, மாற்று மதத்தினர் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொன்ன அவர்கள், சாதாரண கேள்விகளை நம் மக்கள் கேட்டால் கூட பதில் சொல்ல முடியாமல் திணறி திண்டாடி கொண்டிருக்கும் ஒரு நிலையை தான் அல்லாஹ் அவர்களுக்கு அளிதிருக்கிறான். tntj  வை எதிர்க்கும் சில சகோதர்கள் கூட அவர்களின் இந்த நிலையை மாற்றுவதர்கு பதிலாக இன்னும் tntj  வை பழித்து கொண்டிருக்கிறார்கள்அல்லாஹ் அந்த சகோதரர்களுக்கும் அந்த ஜமாதிற்கும் நேர்வழி காட்டி எந்த நோக்கதிற்காக அந்த பள்ளி கட்டபட்டதோ அந்த நோக்கதிற்காக கடைசி வரை பாடுபடகூடியவர்களாக மாற்ற அல்லாஹ் துணை புரிவானாக.

குறிப்பு: இந்த பணிகள் சிறப்பாக நடைபெற்ற போது tntj உடன் இருந்தது.